சேலம்: சேலம் மாநகரம் கருப்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் திரு.அங்கப்பன் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு காரை மடக்கி சோதனை செய்தபோது அதில் கொடிய விஷ நெடியுடன் கூடிய 5 லிட்டர் விஷ சாராயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு குற்றவாளிகள் சேலம் ஓமலூரை சேர்ந்த 1.வெங்கடேஷ் (35), மணிக்குமார் (39) ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். கருப்பூர் போலீசாரின் இச்செயலை சேலம் மாநகர காவல் ஆணையாளர் திரு.T.செந்தில்குமார், I.P.S., அவர்கள் வெகுவாகப் பாராட்டினார்.