தருமபுரி: தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான கும்பாரஅள்ளி காவல் சோதனை சாவடியில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் திரு.மணிவண்ணன் அவர்கள் தலைமையில் போலீசார் வாகன சாதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக கிருஷ்ணகிரியில் இருந்து தருமபுரியை நோக்கி வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை நடத்தினார். அந்த வாகனத்தில் 79 மூட்டைகளில் சுமார் 915 கிலோ எடை கொண்ட தடை செய்யப்பட்ட பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது அவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தியதில் விழுப்புரத்தை சேர்ந்த ஈஸ்வரி 36 என்ற பெண் புகையிலை பொருட்களை வாகனத்தில் கடத்திச் சென்றது தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு சுமார் 5 லட்சத்து 75 ஆயிரம் என்பது விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக காவல் ஆய்வாளர் திரு.வெங்கட்ராமன் அவர்கள் வழக்கு பதிவு செய்து ஈஸ்வரியை கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
















