கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தொப்பையான்குளம் கிராமத்தை சார்ந்த பரமசிவன் மகன் சிவராஜ் (31) என்பவரை அடையாளம் தெரியாத 5 நபர்கள் TN 09AC4921 என்ற எண்ணுள்ள ஆட்டோவில் வந்து கத்தியால் தலையில் தாக்கியதகா கொடுத்த வாக்குமூலம் பெற்று கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அன்று இரவு 01.30 மணிக்கு களத்தூர் கிராமத்தை சார்ந்த விக்னேஷ் 27.. என்பவரை அடையாளம் தெரியாத நான்கு பேர் ஆட்டோவில் வந்து கத்தியால் தலையில் தாக்கி செல்போனை பறித்து சென்றுவிட்டதாக கொடுத்த புகாரின் பேரில் வழிப்பறி வழக்கும் பதிவு செய்யப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பகலவன் இ.கா.ப, அவர்கள் மேற்படி வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டிருந்தார். அதன்படி உளுந்தூர்பேட்டை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.மகேஷ் மேற்பார்வையில் திருநாவலூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.அசோகன், மற்றும் உதவி ஆய்வாளர் திரு.பிரபாகரன், தலைமையில் 2 தனிப்படைகள் அமைத்து எதிரிகளை தீவிரமாக தேடிவந்தனர். சம்பவம் நடந்த சாலையில் உள்ள CCTV காட்சிகளை வைத்து தீவிரமாக விசாரணை செய்து வந்தனர்.
அப்போது ஆட்டோவின் பதிவெண்ணை வைத்து உரிமையாளரை கண்டுபிடித்து சென்னைக்கு சென்ற தனிப்படையினர் அங்கு பதுங்கியிருந்த சென்னையைச் சேர்ந்த ஹரிகரசுதன், முரளிகிருஷ்ணன் (21), ஜெகதீஸ்வரன் (20), தைரியநாதன் (21), ஆகியோர்களை கைது செய்து விசாரணை செய்த போது உளுந்தூர்பேட்டை அருகே உறவினரின் திருமணத்திற்கு வந்த போது இந்த வழிபறியில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டனர். அவர்களிடமிருந்து ஆட்டோ , 3 பட்டாகத்திகள் 2 இரும்பு பைப்புகள் மற்றும் வழிபறி செய்து தொலைபேசியை பறித்து சென்று விற்ற பணம் ரூபாய் 1340 ரூபாய் ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டது. இவ்வழிபறியில் ஈடுப்பட்ட 4 நபர்களை நீதிமன்ற காவலுக்கும், இளஞ்சிறார் ஒருவரை கூர்நோக்கு இல்லத்திற்கும் அனுப்பி வைத்தனர். இந்நிலையில் சம்பவம் நடந்த ஒரே நாளி்ல் குற்றவாளிகள் அனைவரையும் சென்னைக்கு சென்று கைது செய்த உளுந்தூர்பேட்டை காவல்துறையினரை காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடர்ந்து சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.