திருநெல்வேலி: திருநெல்வேலிமாவட்டத்தில் நடைபெறும் சட்ட விரோத செயல்களை தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன், இ.கா.ப., அவர்களின் உத்தரவுப்படி திருநெல்வேலி மாவட்டத்தில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் குற்றவாளிகளை தேடி வந்த நிலையில், 17.07.2021 ஆம் தேதி மட்டும்.
சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த 38 போக்கிரி சரித்திர பதிவேடு குற்றவாளிகள் உட்பட 57 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் 30 நபர்கள் மீது தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகள் மீது தனிகவனம் செலுத்தி அவர்களது நடவடிக்கைகளை முற்றிலும் கட்டுப்படுத்தவும், குற்றங்கள் நடவாமல் தடுக்கவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முழு வீச்சாக எடுக்கப்பட்டு வருகிறது.