வேலூர் : வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா பள்ளிகொண்டா ரங்கநாதர் நகரில் ஒருவர் ரேஷன் அரிசிகளை வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு துணைபோலீஸ் சூப்பிரண்டு திரு.நந்தகுமார், அவர்களுக்கு தகவல் கிடைத்தது. அதிகாரிகள் அந்தப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ரங்கநாதர் நகரில் ஜோதி (50), என்பவரது வீட்டில் 5 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது. பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். ஜோதி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்