சென்னை : சென்னை புழல், மதுரை, சேலம், கடலூரில் உள்ள மத்திய சிறை கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை புழல் சிறை கண்காணிப்பாளராக இருந்த செந்தில்குமார், சேலம் மத்திய சிறை கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார்.
சேலம் சிறை கண்காணிப்பாளர் தமிழ்ச்செல்வன், மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடலூர் சிறை கண்காணிப்பாளராக இருக்கும் நிகிலா நாகேந்திரன், சென்னை புழல் சிறை கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார்.
மதுரை சிறை கண்காணிப்பாளராக இருந்த ஊர்மிளா, திருச்சி சிறை கண்காணிப்பாளராகவும்,
காத்திருப்போர் பட்டியலில் இருந்த கிருஷ்ணகுமார், கடலூர் சிறை கண்காணிப்பாளராகவும், நியமிக்கப்பட்டுள்ளனர்.