தூத்துக்குடி: தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் அருகே நடந்து வந்து கொண்டிருந்த ஒருவரை கத்தியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் தூத்துக்குடி முத்து நகர் பீச் ரோடு பகுதியைச் சேர்ந்த கிங்ஸ்டன் மகன் ராபின்சன் (எ) ராபின் 24, தூத்துக்குடி அழகேசபுரத்தைச் சேர்ந்த கணேசன் மகன் கன்னபெருமாள் 22. உட்பட சிலரை தென்பாகம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். மேற்படி இவ்வழக்கின் குற்றவாளிகளான ராபின்சன் (எ) ராபின் மற்றும் கண்ணபெருமாள் ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ராஜாராம் அவர்களும்,
கடந்த 20.01.2023 அன்று கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மந்திதோப்பு பாண்டவர்மங்கலம் பகுதியில் வைத்து மந்திதோப்பு துளசிங்காநகரை சேர்ந்த மாடசாமி மகன் வெயில்காளை 44. என்பவரை கத்தியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் கோவில்பட்டி வள்ளுவர் நகரை சேர்ந்த பாண்டியன் மகன் மகேஷ்குமார் (எ) சுள்ளான் 39. என்பவரை கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். மேற்படி இவ்வழக்கின் குற்றவாளியான மகேஷ்குமார் (எ) சுள்ளான் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு. கிங்ஸ்லி தேவ் ஆனந்த் அவர்களும்,
கடந்த 30.01.2023 அன்று திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருச்செந்தூர் மெயின் ஆர்ச் பகுதியில் உள்ள ஒரு தனியார் லாட்ஜில் பணத்திற்காக பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய வழக்கில் முத்தையாபுரம் ஜே.எஸ் தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மனைவி மாரியம்மாள் 49, மற்றும் இவரது மகன் மணிகண்டன் 22. ஆகியோரை திருச்செந்தூர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். மேற்படி இவ்வழக்கின் குற்றவாளிகளான மாரியம்மாள் மற்றும் மணிகண்டன் ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க திருச்செந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. முரளிதரன் அவர்களும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் அறிக்கை தாக்கல் செய்தனர்.
மேற்படி காவல் ஆய்வாளர்களின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு.எல். பாலாஜி சரவணன் அவர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பரிந்துரை செய்தார்.
அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் திரு. கே. செந்தில்ராஜ் இ.ஆ.ப அவர்கள் தூத்துக்குடி முத்துநகர் பீச் ரோடு பகுதியைச் சேர்ந்த கிங்ஸ்டன் மகன் 1) ராபின்சன் (எ) ராபின், தூத்துக்குடி அழகேசபுரத்தைச் சேர்ந்த கணேசன் மகன் 2) கன்னபெருமாள், கோவில்பட்டி வள்ளுவர் நகரை சேர்ந்த பாண்டியன் மகன் 3) மகேஷ்குமார் (எ) சுள்ளான், முத்தையாபுரம் ஜே.எஸ் தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மனைவி 4) மாரியம்மாள் மற்றும் இவரது மகன் 5) மணிகண்டன் ஆகியோரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் சம்மந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் மேற்படி 5 குற்றவாளிகளையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.