கோவை: கோவை மாவட்ட காவல் துறையின் சார்பாக, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செல்வநாகரத்தினம் இ.கா.ப., அவர்கள் இன்று (29.01.2022) காலை கொரோனா விழிப்புணர்வு மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து ஆண் காவலர்களுக்கு 10 கி.மீ மற்றும் பெண்காவலர் களுக்கு 5 கி.மீ மாரத்தான் ஓட்டம் ஈச்சனாரி கற்பகம் கல்லூரி சந்திப்பிலிருந்து மதுக்கரை வரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கொடியேற்றி துவங்கி வைத்தார். இதில் 45 பெண் காவலர்கள் மற்றும் 200 ஆண் காவலர்களும் கலந்து கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்