திருச்சி: திருச்சி காந்திமார்க்கெட் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட தாராநல்லூர் கழிவுநீர் பாலம் அருகிலுள்ள கல்லறை முன்பு சூரஞ்சேரியை சேர்ந்த தமிழ்செல்வி என்பவர் சட்ட விரோதமாக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருளான கஞ்சாவை சுமார் 5 கிலோ 150 கிராம் விற்பனைக்காக வைத்திருந்தவரை கைது செய்துகாந்திமார்க்கெட் காவல் நிலைய குற்ற எண்.1053/21-ன்படி வழக்கு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேற்படி குற்றவாளி தமிழ்செல்வி என்பவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 9 வழக்குகளில் சம்மந்தப்பட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதால் மேற்படி குற்றவாளி குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த வேண்டி காந்திமார்க்கெட் காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்துதிருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.G.கார்த்திகேயன்,இ.கா.ப., அவர்கள் மேற்படி நபரை
குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்கள். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் இருந்து வரும் மேற்படி குற்றவாளி தமிழ்செல்விக்கு குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்தும் மேற்படி குற்றவாளி சிறையில் அடைக்கப்பட்டார்.
திருச்சியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு. நிஷாந்த்