சென்னை : சென்னை பெருநகர காவல், புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் வசிக்கும் காதர்பாஷா, வ/38 என்பவர் 2017ம் ஆண்டு அவரது 12 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக, அச்சிறுமியின் தாய் W-16 புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில். புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் குழுவினர் விசாரணை செய்து போக்சோ சட்டப்பிரிவில் வழக்குப் பதிவு செய்து, எதிரி காதர் பாஷா கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.
இவ்வழக்கு தொடர்பாக, போக்சோ வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், W-16 புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் முறையாக சாட்சிகளை ஆஜர்படுத்தி, விசாரணை முடிவடைந்து 04.03.2021 அன்று காதர்பாஷா மீது பாலியல் தொந்தரவு குற்றம் நிரூபிக்கப்பட்டதால், குற்றவாளி காதர் பாஷாவுக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.10,000/- அபராதம் விதித்து கனம் போக்சோ வழக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி அவர்கள் தீர்ப்பு வழங்கினார். குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தந்த W-16 புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல்துறை உயர் அதிகாரிகள் வெகுவாகப் பாராட்டினார்கள்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

அப்துல் ஹாபிஸ்