திருச்சி: திருச்சி சரக காவல்துறை உட்பட்ட திருச்சி ,கரூர், பெரம்பலூர் ,அரியலூர், மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, போலீஸ் கிளப் ,காவலன் செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி 21.01.2020 மாலை 3.00 மணியளவில் திருச்சி ஆயுதப்படை திருமண மண்டபத்தில் காவல்துறை துணை தலைவர் திரு. K.பாலகிருஷ்ணன் இ.கா.ப அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
காவல்துறை துணைத்தலைவர் குழந்தை பாதுகாப்பு சம்பந்தமாக குழந்தை திருமணம் தடுத்தல், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாத்தல், மற்றும் ஊராட்சி பகுதிகளில் நடைபெறும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை எவ்வாறு தடுப்பது இதில் மாணவர் மற்றும் காவலர்கள் நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் போலீஸ் கிளப் பள்ளிகளில் செயல்பட்டு வருவது குறித்து பேசினார்.
இந்நிகழ்ச்சியில் திருச்சி, கரூர் ,பெரம்பலூர், அரியலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களை சார்ந்த ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர்கள் , குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் கலந்துகொண்டனர். திருச்சி மாவட்ட குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் அஜிம் அவர்கள் வரவேற்றார். குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிரான கூட்டமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபு நன்றி கூறினார்.
போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்
Y.பாலகுமரன்
திருச்சி