தூத்துக்குடி : தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், பல வழக்குகளில் சம்மந்தப்பட்ட குற்றவாளி, 6 மாத பிணையில் வந்தவர் மீண்டும் குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்டதால் மேற்படி குற்றவாளியை கைது செய்து பிணையை மீறிய குற்றத்திற்காக தூத்துக்குடி உட்கோட்ட நடுவர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் நீதிமன்றம் முன்பு ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலுக்கு உட்படுத்திய வடபாகம் காவல் நிலைய போலீசார் திரு. ரபி சுஜின் ஜோஸ், உதவி ஆய்வாளர் திரு. சிவராஜா, தலைமை காவலர் திரு. லூர்து வேதநாயகம், முதல் நிலை காவலர்கள் திருமதி. ஹசினாபானு மற்றும் திரு. பாலசுப்பிரமணியன் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும், முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தல் மற்றும் விற்பனை வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளி கைது செய்யப்படாமல் இருந்த நிலையில், மேற்படி குற்றவாளியை பெங்களூர் சென்று கைது செய்து புலன் விசாணை அதிகாரிக்கு உதவியாக இருந்த முறப்பநாடு காவல் நிலைய ஆய்வாளர் திரு. அசோகன், உதவி ஆய்வாளர் திரு. அந்தோணிராஜ், சிப்காட் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. சங்கர், முறப்பநாடு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. சுந்தரராஜ் மற்றும் புதுக்கோட்டை காவல் நிலைய காவலர் திரு. மீனாட்சி சுந்தரம் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணியை பாராட்டினார்.
சங்கரலிங்கபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 80 ¼ பவுன் தங்க நகைகள் மற்றும் ரூபாய் 3 லட்சம் ரொக்கப்பணம் ஆகியவை திருடுபோன நிலையில் மேற்படி வழக்கில் சம்மந்தப்பட்ட 4வது குற்றவாளியை விழுப்புரத்தில் வைத்து கைது செய்து திருடுபோன 11 பவுன் தங்க நகைகளை மீட்ட மாசார்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. அனிதா, புதூர் காவல் நிலைய முதல் நிலை காவலர் திரு. பரசுராமன், மாசார்பட்டி காவல் நிலைய முதல் நிலை காவலர் திரு. செந்தில்முருகன், காவலர்கள் திரு. சோலைப்பாண்டி செல்வம் மற்றும் திரு. பாண்டி ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும், குலசேகரன்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவின் போது 10 நாட்கள் போக்குவரத்து நெரிசல் இல்லாமலும், தனிப்பிரிவு அலுவலை சிறப்பாகவும் செய்த தூத்துக்குடி போக்குவரத்து பிரிவு ஆய்வாளர் திரு. மயிலேறும்பெருமாள், திருச்செந்தூர் போக்குவரத்து பிரிவு உதவி ஆய்வாளர் திரு. வேல்முருகன், குலசேகரன்பட்டினம் காவல் நிலைய தனிப்பிரிவு தலைமை காவலர் திரு. தாமஸ் மேத்யூ ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும், சூரங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 460 கிலோ கஞ்சா, 240 லிட்டர் மண்ணெண்ணெய் ஆகியவற்றை கடத்திய வழக்கில் மேற்படி கஞ்சா, மண்ணெண்ணெய் மற்றும் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட 2 சரக்கு வாகனங்களை கைப்பற்றிய விளாத்திகுளம் உட்கோட்ட தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் திரு. சேகர், குளத்தூர் காவல் நிலைய முதல் நிலை காவலர் திரு. பிரபாகரன் மற்றும் சூரங்குடி காவல் நிலைய காவலர் திரு. பாலகிருஷ்ணன் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணியை பாராட்டினார்.
தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழைய துறைமுகம் பகுதியில் ஆதரவற்ற முதியவரை கல்லால் தாக்கி கொலை செய்த வழக்கில் எவ்வித துப்பும் கிடைக்காமல் இருந்த நிலையில் சிசிடிவி பதிவுகளை கொண்டு எதிரியை கைது செய்து வழக்கின் புலன் விசாரணைக்கு உதவியாக இருந்த மத்தியபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. முருகப்பெருமாள், மத்தியபாகம் காவல் நிலைய தனிப்பிரிவு தலைமை காவலர் திரு. சுப்பிரமணியன், வடபாகம் காவல் நிலைய தனிப்பிரிவு முதல் நிலை காவலர் திரு. ராஜாமணி, மத்தியபாகம் காவல் நிலைய காவலர்கள் திரு. சுந்தரராஜ் மற்றும் செல்வக்குமார் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும், தூத்துக்குடி மாவட்ட சி.சி.டி.என்.எஸ் பிரிவில் மிகவும் திறம்பட பணி செய்தும், எப்.ஆர்.எஸ் செயலியை பயன்படுத்தி குற்றவாளிகளை அடையாளம் கண்டுபிடித்து புலன் விசாரணைக்கு உதவியாக இருந்த சி.சி.டி.என்.எஸ் பிரிவு உதவி ஆய்வாளர் திருமதி. விக்டோரியா அற்புதராணி என்பவரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும், 4 காவல் ஆய்வாளர்கள் உட்பட 49 காவல்துறையினரின் சிறந்த சேவையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன், அவர்கள் வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.