சென்னை: சென்னை பெருநகர காவல்துறை – குற்ற வழக்குகளில் கண்டறியப்பட்ட- 47- இளஞ்சிறார் களுக்கு நல்வழிப்படுத்தும் சிறப்புத் தொழில்நெறி மற்றும் திறன் வளர்ப்பு பயிற்சி வகுப்பு (21.09.2020) கிண்டியில் துவக்கி வைக்கப்பட்டது. குற்ற வழக்குகளில் கண்டறியப்பட்ட 47 இளைஞர்களை நல்வழிப்படுத்தும் முயற்சியாக மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் சென்னை பெருநகர காவல் இணைந்து நடத்திய சிறப்பு தொழில் மற்றும் திறன் பயிற்சிக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (21.09.2020) காலை 11.00 மணி அளவில் கிண்டியில் நடைபெற்றது.
இதில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் திரு. விஷ்ணு இ.ஆ.ப அவர்கள் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். இதில் சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு. மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
அப்துல் ஹாபிஸ்