தர்மபுரி : தர்மபுரி மாவட்டம் முக்கல்நாயகன்பட்டியை சேர்ந்தவர் கட்டிட மேஸ்திரி சண்முகம் (வயது 22). தர்மபுரி காமாட்சி அம்மன் தெருவில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வார். அப்போது பாட்டி வீட்டருகே வசிக்கும் பட்டதாரி பெண்ணான அனிதாவுடன் (வயது 21) பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் காதலாக மாறியது. இவர்கள் இருவரின் காதலுக்கு அனிதாவின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய அனிதா, தனது காதலன் சண்முகத்தை தொப்பூர் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டார். பின்னர் இந்தக் காதல் ஜோடியினர் அதியமான் கோட்டை போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டுத் தஞ்சம் அடைந்தனர். இதனையடுத்து போலீசார் இருதரப்பினரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து பெற்றோர்கள் உடன் காதல் ஜோடியை அனுப்பி வைத்தனர்.
தர்மபுரியில் இருந்து நமது நிருபர்
க.மோகன்தாஸ்.