கோவை: கோவை குனியமுத்தூர் குமரன் கார்டனை சேர்ந்தவர் முகமது செரிப் 50 இவர் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை சேர்ந்தஒரு வியாபாரியிடம் ரூ 2.25 லட்சத்திற்கு தேங்காய் வாங்கி இருந்தார்.அதில் 1.5 லட்சம் மட்டும் திருப்பிக் கொடுத்தா.ர் மீதி ரூ 75 ஆயிரம் பாக்கி வைத்திருந்தார்.
இந்த பணத்தை கேட்டு தஞ்சை மாவட்டம் பேராவூரணி சேர்ந்த 5 பேர் நேற்று காரில் குனியமுத்தூரில் உள்ள முகமது செரிப் வீட்டுக்கு வந்தனர். அங்கு தூங்கிக்கொண்டிருந்த முகமது செரிப்பை மிரட்டி காரில்கடத்திச் சென்றுவிட்டனர்.
இதுகுறித்து அவரது மனைவி சமர்நிஷா குனியமுத்தூர் காவல்நிலையத்தில்புகார் செய்து உள்ளார் .போலீசார் கடத்தல் வழக்குப்பதிவு செய்து 5 பேரை தேடி வருகிறார்கள்.