இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள சோழியகுடியில் உணவகம் பின்புறமாக வைத்து சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்து கொண்டிருந்த பிரபாகரன் மற்றும் காளிமுத்து ஆகியோர் மீது தொண்டி காவல் ஆய்வாளர் திரு.முருகேசன் அவர்கள் வழக்கு பதிவு செய்து கைது செய்தார்கள்.
மேலும், அவர்களிடமிருந்து 450 மதுபான பாட்டில்கள் மற்றும் சுமார் ரூபாய் 12000 பணம் பறிமுதல் செய்தனர்.