கோவை : கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செல்வ நாகரத்தினம் ஐபிஎஸ் அவர்களின் உத்தரவின் பேரில் உட்கோட்ட காவல் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.சீனிவேலு அவர்கள் மேற்பார்வையில், தொண்டாமுத்தூர் வட்ட ஆய்வாளர் பொறுப்பு திரு.சாஸ்தா அவர்கள் தலைமையில், உதவி ஆய்வாளர் திரு.சேகர் ரத்திஸ் மற்றும் தலைமை காவலர் திரு.ரஞ்சித் குமார் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர், வடவள்ளி பகுதியில் பல்வேறு கொள்ளை மற்றும் திருட்டு வழக்கில் தொடர்புடைய மதுரையை சேர்ந்த பாஸ்கர் என்ற கமலக்கண்ணன் என்ற பக்தவச்சலம் என்ற நபரை வடவள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கல்வீரம்பாளையம் வைத்து கைது செய்தனர்.
விசாரணையில் இந்த நபர் திருச்சி, மதுரை, திண்டுக்கல், சென்னை ஆகிய பகுதிகளில் முப்பதிற்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர் என்பது தெரியவருகிறது. மேலும் வடவள்ளி பகுதியில் திருடப்பட்ட சொத்துக்களை நபரிடமிருந்து மீட்டு கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
![](https://tnpolice.news/wp-content/uploads/2021/06/gokul.png)