கோவை: கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வநாகரத்தினம் இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் உட்கோட்ட காவல் துறையினர் மற்றும் மதுவிலக்கு அமலாக்க காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 43 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 332 மது பாட்டில்கள் மற்றும் 146 லிட்டர் கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இது போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்