கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி உட்கோட்ட கிருஷ்ணகிரி தாலுக்கா காவல் நிலைய பகுதியில் தடைசெய்யப்பட்ட 42 லட்ச ரூபாய் குட்கா பொருட்கள் கடத்திய வழக்கில் குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இவ்வழக்கின்குற்றவாளிகள் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்ட வழக்குகள் உள்ளதால் கிருஷ்ணகிரி தாலுக்கா காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு.சரவணன் அவர்களின் துரித நடவடிக்கையால் இரண்டு குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.சாய்சரன் தேஜஸ்வி, IPS அவர்களின் பரிந்துரையை ஏற்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் திரு.ஜெயச்சந்திர பானுரெட்டி, IAS அவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டதின் பேரில் இரண்டு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.