மதுரை:அரசு வேலை வாங்கித் தருவதாக மூதாட்டியிடம் நாற்பத்தி ஏழு லட்சம் மோசடி செய்ததாக 2 பெண்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.மதுரை விஸ்வநாதபுரம் சென்ட்ரல் பாங்க் காலனியைச் சேர்ந்தவர் பஞ்சவர்ணம் 60. இவரது மகளுக்கு அரசு வேலை பெற முயற்சி செய்து கொண்டிருந்தார். அவரிடம், அறிமுகமான ஸ்ரீ புகழ் இந்திரா, ரேணுகா என்ற 2 பெண்கள் தங்களுக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதாகவும், அரசு வேலை வாங்கித் தருவதாகவும் கூறியுள்ளனர்.
அவரது பேச்சை நம்பிய பஞ்சவர்ணம் 2021 ஆம் ஆண்டு ரூபாய் நாற்பத்தி ஏழு லட்சத்து 26 ஆயிரம் கொடுத்துள்ளார். ஆனால், கூறியபடி அவர்கள் வேலை வாங்கி தரவில்லை. ஏமாற்றியது தெரிய வந்தது. இதுகுறித்து, பஞ்சவர்ணம் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் 2 பெண்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி