திண்டுக்கல்: திண்டுக்கல்லில் முழு ஊரடங்கை பின்பற்றாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை போலீசார் எடுத்து வருகின்றனர்.
முன்பு எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு செய்த போலீசார் இப்போது வாகனங்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் ஊரடங்கில் தேவையின்றி சுற்றித் திரிந்த நபர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் கார், மோட்டார் சைக்கிள் உட்பட 407 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
முக கவசம் அணியாமல் சுற்றித்திரிந்த 865 பேரை பிடித்து தலா ரூ.200 அபராதம் விதித்தனர். போலீசாரின் செயலால் நகரில் 10 மணிக்கு மேல் வாகனங்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
தற்போது கடுமையான நடவடிக்கைகள் ஊரடங்கை கடுமையாக அமல் படுத்த, கை கொடுப்பதாக போலீசார் பெருமிதம் கொள்கின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா