மதுரை: நதிகள் மலைகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றின் பாதுகாப்பு மற்றும் அதன் மரபு மாறாமல் பேணிக்
காப்பதைவலியுறுத்தி, உத்திரப்பிரதேசம் அயோத்தியில் இருந்து திருமதி சித்ரா பகத் என்ற பெண்மணி தனது தாய் தந்தை மட்டும் குடும்பத்துடன் 4000 கிலோமீட்டர் தூரம் பாதயாத்திரையாக நடந்து ராமேஸ்வரம் பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார்.
மதுரை வந்துடைந்த அவர் 12 லட்சம் மரக்கன்றுகளை நதியின் இரு கரையிலும் மலைப்பாங்கான இடங்களிலும் நடும் முயற்சியாக இதுவரை 10 லட்சம் மரக்கன்றுகளை நட்டு உள்ளார். தண்ணீரின் தேவையை வலியுறுத்தும் அவர் வருங்காலங்களில் நீரை நாம் சிக்கனமாகவும் தேவைக்கேற்ப பயன்படுத்தினால் தண்ணீர்காக உலகம் மூன்றாம் உலகப்போரை சந்திக்க வேண்டி இருக்காது என்று கூறினார்.
தனது பாதயாத்திரையின் நோக்கமே, நீர் நிலம் ஆகாயம் காற்று மற்றும் நெருப்பு போன்ற பஞ்ச பூதங்களை உலக சமுதாயம் போற்றி பாதுகாப்பதே எனக் கூறும் சித்ரா பகத் தனது, பாதயாத்திரைக்கு ராம் ஜானகி யாத்ரா என, பெயர் சூட்டி மேலும், இதை வலியுறுத்தி மதுரையில் உள்ள குயின் மீரா தனியார் பள்ளி வளாகத்தில் மாணவர்களோடு மரக்கன்றுகளை நட்டு அவர்களோடு, உரையாடல் செய்து மாணவர்களுக்கு மரம், நதிகள், சுற்றுச்சூழல் போன்றவற்றின் பயன்களையும் நன்மைகளையும் விளக்கி அறிவுரை கூறினார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி