திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், ஆயுதப்படையில் உள்ள தற்காலிக காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்று வரும் காவலர் (RPC 101) திரு.நிதீஷ் குமார், அவர்கள் திருச்சி சிறப்பு காவல் படை முதலாம் அணியில் நடைபெற்ற காவலர் பயிற்சி பள்ளிகளுக்கு இடையேயான 400 மீட்டர் ஓட்ட போட்டியில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார். (30.08.2022) வெற்றி பெற்ற காவலரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்கள் நேரில் அழைத்து பதக்கம் அணிவித்து பாராட்டினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா