திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் ரெட்டியார்பட்டியை சேர்ந்த சுரேஷ் என்பவர் இட்டேரி பகுதியில் அவருக்கு சொந்தமான 8.37 சென்ட் நிலத்தினை தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரத்தை சேர்ந்த செல்வ மோகன்தாஸ் பாண்டியன், அவர்களுக்கு 1997 ம் வருடம் விற்பனை செய்துள்ளார்,
மேற்படி நிலத்தின் முன்னாள் உரிமையாளரான சுரேஷ் போலி ஆவணம் மூலம் மீண்டும் வேறொரு நபரிடம் விற்பனை செய்துள்ளது செல்வ மோகன்தாஸ் பாண்டியன் அவர்களுக்கு தெரியவந்ததால் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் அவர்கள் தனது நிலத்தை மீட்டு தருமாறு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன்,இ.கா.ப., அவர்களிடம் மனு அளித்தார்,
மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கும் படி திருநெல்வேலி மாவட்ட நில அபகரிப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயபால் பர்ணபாஸ் அவர்களுக்கு உத்தரவிட்டதன் பேரில் நில அபகரிப்பு பிரிவு ஆய்வாளர் திருமதி சாந்தி, அவர்கள் தலைமையிலான சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.திருமலை, தலைமை காவலர் திரு.நாகராஜன், மற்றும் இரண்டாம் நிலை காவலர் திரு அய்யாதுரை ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டதில்.
மேற்படி நிலத்தை போலி ஆவணம் மூலம் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேற்படி தீவிரமாக நடவடிக்கை மேற்கொண்டு 40 லட்சம் மதிப்பிலான 8.37 சென்ட் நிலத்தினை மீட்டு அதற்கான ஆவணத்தை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன்,இ.கா.ப., அவர்கள் நில உரிமையாளரான செல்வமோகன் தாஸ்பாண்டியன் அவர்களிடம் வழங்கினார்.
இவ்வழக்கில் திறம்பட விசாரணை மேற்கொண்டு 40 லட்சம் மதிப்புள்ள 8.37 சென்ட் நிலத்தினை மீட்ட திருநெல்வேலி மாவட்ட நில அபகரிப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் துறையினரை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன் இ.கா.ப., அவர்கள் வெகுவாகப் பாராட்டினார்.