திருவாரூர்: தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் அவர்களின் உத்தரவின்பேரில் கடந்த 23.09.21 முதல் 25.09.21 வரை மூன்று தினங்களாக தமிழகம் முழுவதும் ரவுடிகள் கைது வேட்டை நடத்தப்பட்ட நிலையில் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.C.விஜயகுமார் IPS அவர்களின்
நேரடி பார்வையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு மாவட்டத்தில் குற்றச்செயல்கள் மற்றும் கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட போக்கிரி பதிவேடு குற்றவாளிகள் (H.S ரவுடி ) மற்றும் பிரச்சனைக்குரிய ரவுடிகள் ஆகியோரை பிடிக்க கடந்த மூன்று தினங்களாக அதிரடி வேட்டை நடத்தப்பட்டது.
ரவுடிகளின் வீடுகளுக்கு தனிப்படையினர் சென்று நடத்திய அதிரடி சோதனை மற்றும் வேட்டையில் 40 முக்கிய ரவுடிகள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் திருவாரூர் மாவட்டத்தில் இதுபோன்று யாரேனும் பொதுமக்களை அச்சுறுத்தவோ பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு குந்தகம் விளைவிக்கவோபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால்
அவர்கள் மீது கடுமையான சட்டபூர்வ நடவடிக்கை எடுப்பது மட்டுமல்லாமல்குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.