திருவாரூர்: மகிளா நீதிமன்றம்அதிரடி தீர்ப்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில் 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த அய்யப்பன் 26 த.பெ.நடராஜன், நடுத்தெரு பெருமங்கலம் குடவாசல்
என்பவர் மீது கடந்த 29.01.2021 அன்று நன்னிலம் அனைத்து மகளிர் காவல்நிலைய த்தில்
POCSO-சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் வழக்கில் சம்மந்தப்பட்ட
எதிரியை கைது செய்து சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொண்டு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் வழக்கில் விசாரணை மேற்கொண்ட திருவாரூர் மகிளா நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட மேற்படி எதிரி அய்யப்பனுக்கு இன்று (25.03.22) 40 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.6000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்டு எதிரியை கைது செய்து விரைந்து வழக்கின் புலன்விசாரணை முடித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து எதிரிக்கு தண்டனை பெற்றுத்தந்த நன்னிலம் அனைத்து மகளிர் காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
திரு.C.விஜயகுமார் IPS., அவர்கள் பாராட்டினார்கள்.
திரு.அந்தோணி ராஜா