மதுரை : மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப., அவர்கள் போக்குவரத்து காவல் அதிகாரிகளுக்கு வாகன தணிக்கையின் போது சாலை விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
மேலும் மதுரை மாநகரருக்கு 40 உடல் கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன. 9 உடல் கேமராக்கள் போக்குவரத்து காவல் ஆய்வாளர்களுக்கும் 16 உடல் கேமராக்கள் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர்களுக்கும் 4 உடல் கேமராக்கள் High Way Petrol வாகனங்களுக்கும் 5 உடல் கேமராக்கள் Delta வாகனங்களுக்கும் 3 உடல் கேமராக்கள் போக்குவரத்து புலனாய்வு பிரிவுகளுக்கும் மற்றும் 3 உடல் கேமராக்கள் மதுரை மாநகரின் முக்கிய இடங்களில் உள்ள காவல் அதிகாரிகளுக்கும் காவல் ஆணையர் அவர்கள் வழங்கியுள்ளார்.
இதன் மூலம் சாலை விதிகளை மீறுபவர்கள் குற்றவாளிகளின் நடமாட்டங்கள் மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டறிய இந்த கேமராக்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் காவல் ஆணையர் அவர்கள் கூறியுள்ளார்கள்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்
மதுரை மதுரை