சென்னை: சென்னையில் உள்ள பிரபல செக்கியூரிட்டி நிறுவனத்தில் ரூ. 4.42 கோடி மோசடி செய்த முன்னாள் மேலாளர் ஸ்ரவன்குமார் என்பவர், சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் குழுவினரால் கைது.CCB team of Greater Chennai Police arrested Shravan Kumar who cheated Rs.4.42 Crores in Private Security Company.சென்னை, சாலிகிராமத்தில் உள்ள பிரபல செக்கியூரிட்டி நிறுவனமான Bulldyers Integrated Solutions Pvt., Ltd, என்ற நிறுவனத்தின்நிர்வாகஇயக்குனர்ரு.G.ஸ்ரீநாதரெட்டிஎன்பவர் தனது நிறுவனத்தில் அவரது அக்கா மகன் P. ஸ்ரவன்குமார் வயது, (29) என்பவரை நம்பிக்கையின் பேரில் கடந்த 2017 ஆம்ஆண்டுமேலாளராகபணியமர்த்தியுள்ளார். புகார்தாரர் பணி நிமித்தமாக அடிக்கடி வெளியூர் செல்ல வேண்டி இருந்ததால் நிறுவனத்தின் மொத்த பொறுப்புகளையும் எதிரியே கவனித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கொரானா பெருந்தொற்றால் ஏற்பட்ட பொதுமுடக்கம் காரணமாக. கடந்த 2020-2021 வரை எதிரி வீட்டில் இருந்தே பணிபுரிந்து வந்துள்ளார். பொது முடக்கம் முடிந்த பின்னரும் மார்ச் மாதம் 2021 க்கு பிறகும் எதிரி பணிக்குவரவேண்டியவர் வராமல் இருந்துள்ளார். எனவே புகார்தாரர் தனது கணக்காளர்கள் மூலம் நிறுவனத்தின் வங்கி கணக்குகளைஆய்வுசெய்ததில்,கடந்த01.01.2018முதல்11.05.2021வரையிலானகாலகட்டத்தில்எதிரிபுகார்தாரருக்கு தெரியாமல் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் சம்பளம் மற்றும்நிறுவனம் அரசுக்கு கட்ட வேண்டிய GST, வருமான வரி பணத்தை நிறுவனத்தின் கணக்கில் கட்டியது போல போலியான ஆவணங்கள் தயார் செய்து ரூ.4,42,14,312/- பணத்தை எதிரி தனது சொந்த வங்கி கணக்குகளுக்கு மாற்றம் செய்து மோசடி செய்துள்ளது தெரியவந்தது.இது தொடர்பாக புகார்தாரர் திருG.ஸ்ரீநாதரெட்டி சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவில், ஆவண மோசடி தடுப்பு பிரிவு-II (EDF-II) ல் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் மேற்படி வழக்கில் தலைமறைவாக இருந்த எதிரி P. ஸ்ரவன்குமார் இருப்பிடம் பற்றி கிடைத்த ரகசிய தகவலின்பேரில் ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், புங்கனூர், தாட்டிமாகுள்ளபாளையத்தில் இருந்த எதிரியை காவல் உதவி ஆய்வாளர் லோகேஸ்வரன் தலைமையிலான தனிப்படையினர் 07.03.2022 அன்று கைது செய்து எதிரியை 08.03.22 அன்று கனம் நடுவர் CCB & CBCID நீதிமன்றம், எழும்பூர் அவர்கள் முன்பு ஆஜர்படுத்தினர். மேற்படி எதிரி மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.