தஞ்சை : தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டம் பட்டிஸ்வரம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட தேனாம்படுகை கிராமத்திலுள்ள வடக்கு தெருவைச் சேர்ந்த மணி என்பவரின் மகன் கௌதமன் (28) தொகுப்பு வீட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக இவரின் வீட்டின் பின்புறம் கட்டப்பட்டிருந்த பகுதியில் நேற்று இரவு கௌதமன் மற்றும் அவரது மகள் அனன்யா (4) இருவரும் தூங்கி கொண்டு இருந்தார்கள்.
அப்போது திடீரென்று மண் சுவர் இடிந்து விழுந்தது. இவ்விபத்தில் சிக்கிய தந்தை மற்றும் மகளை அருகிலிருந்த உறவினர்கள் காப்பாற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலன் அளிக்காமல் சிறுமி அனன்யா இன்று மருத்துவமணையில் மரணம் அடைந்தார். இது தொடர்பாக பட்டிஸ்வரம் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
