திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் உத்தரவின் படி, எரவாஞ்சேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சுமார் 1.5-இலட்சம் மதிப்பிலான செல்போன் டவர் உதிரி பாகங்களை திருடிய நபர்களை கைது செய்ய உதவி ஆய்வாளர் திரு.கோபிநாத் அவர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
மேற்படி, தனிப்படையினர் தொடர்ந்து தீவிர விசாரணை செய்தும், அப்பகுதியில் இருந்த CCTV பதிவுகளை ஆய்வு செய்தும், கைப்பேசி அழைப்பு விபரங்களை ஆய்வு செய்தும், தீவிர வாகன தணிக்கை செய்தும் செல்போன் டவர் உதிரி பாகங்களை திருடிய – நாகப்பட்டினம் மாவட்டம், விற்குடி, ஆணைக்குள தெருவை சேர்ந்த திருமுருகன் மகன் தினேஷ் 19. பீகார் மாநிலம், சமஸ்திபூர், மல்சர் பகுதியை சேர்ந்த ராமச்சந்திரதாக்கூர் மகன் ஹேம்நாத்குமார் 30, உத்திரப்பிரதேச மாநிலம், பஞ்சலி குர்ட் மீருட் பகுதியை சேர்ந்த லியாகத் அலி மகன் சல்மான் அன்சாரி 32, நஜ்ரூதீன் மகன் ரஷித் 21, உத்திரப்பிரதேச மாநிலம், ஜான்கீர்பூர் பகுதியை சேர்ந்த ஆயுபீ அன்சாரி மகன் வாசிம் அன்சாரி 25. ஆகிய ஐந்து நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
மேற்படி நபர்களுக்கு வேறு ஏதேனும் திருட்டு வழக்கில் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் காவல்துறையினர் தொடரந்து விசாரணை செய்தும், மேற்படி நபர்கள் திருடிய சுமார் 1.5-இலட்சம் மதிப்பிலான ரேடியோ ரிமோட் யூனிட் மற்றும் திருட்டுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனங்கள்-05, நான்கு சக்கர வாகனம்-01 பறிமுதல் செய்தனர்.
சிறப்பாக செயல்பட்டு திருட்டில் ஈடுப்பட்ட நபர்களை கைது செய்த நன்னிலம் உட்கோட்ட Crime Team உதவி ஆய்வாளர் திரு.கோபிநாத் தலைமையிலான காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc.,(Agri)., அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.
பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் திருட்டு, வழிப்பறி போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்பூர்வ கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc.,(Agri)., அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.