திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் காவல் நிலையத்தில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் கைது செய்யப்பட்ட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்து அடைக்கப்பட்டனர். கொலை வழக்கில் கைதான மேலூரை சேர்ந்த விக்னேஷ், கொலை முயற்சி வழக்கில் கைதான அத்திப்பட்டு பகுதியை சேர்ந்த ராகுல் டேவிட், சங்கர், பிரபாகரன் ஆகிய 4பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேற்கொண்டு குற்ற சம்பவங்களில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் 4பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய ஆவடி மாநகர காவல் ஆணையர் அருண், உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்தாண்டில் இதுவரையில் ஆவடி மாநகர காவல் எல்லையில் குற்ற சம்பவங்களில் தொடர்புடைய 160 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளதாக ஆவடி மாநகர காவல் ஆணையரக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு