கோவை: கோவை மாவட்டம் காரமடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சுலோச்சனா 73. என்பவர் வசித்துவருகிறார். இவர் 15.02.2022 -ம் தேதி காலை ரயில்வே பாலம் அருகே உள்ள மளிகை கடைக்கு சென்று கொண்டிருக்கும் போது, இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத சில மர்ம நபர்கள் சுலோச்சனா கழுத்தில் இருந்த 4 பவுன் தங்க சங்கிலியை திருடிச் சென்றுள்ளனர். இதுசம்பந்தமாக சுலோச்சனா 73. காரமடை காவல் நிலையம் சென்று புகார் கொடுத்துள்ளார்.
இப்புகாரின் அடிப்படையில் உதவி ஆய்வாளர் திரு. முனிசாமி அவர்கள் வழக்குப்பதிவு செய்து புலன்விசாரணை மேற்கொண்டு, காரமடையை சேர்ந்த முகமது என்பவரது மகன் யூசுப் 43. மற்றும் ஹரேந்திரன் சௌத்ரி என்பவரது மகன் திலீப் 25. ஆகிய 2 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 4 பவுன் தங்க சங்கிலியை பறிமுதல் செய்தனர்.
