திருவண்ணாமலை: திருவண்ணாமலை நகரம், முத்துவிநாயகர் கோவில் தெருவை சேர்ந்த சூர்யா, 25, என்பவர் மற்றும் வேலூர் மாவட்டம், கம்மவான்பேட்டை கிராமம், வண்ணாரப்பேட்டை தெருவை சேர்ந்த பழனி, 35, என்பவரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட குற்றத்திற்காக திருவண்ணாமலை நகர காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு.B.சந்திரசேகரன் அவர்கள் வழக்குபதிவு செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தார்.
மேலும் கலசபாக்கம் வட்டம், வீரலூர் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன், 31,என்பவர் வழிப்பறியில் ஈடுபட்ட குற்றத்திற்காக, போளூர் காவல் ஆய்வாளர் திரு.K.ஜெயபிரகாஷ் அவர்கள் வழக்குபதிவு செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தார்.
மேலும் செங்கல்பட்டு மாவட்டம், பெரும்பாக்கம், பாரதியார் தெருவை சேர்ந்த அருண்குமார், 25, கொலை முயற்சியில் ஈடுபட்ட குற்றத்திற்காக, தூசி காவல் ஆய்வாளர் திரு.A.அண்ணாதுரை அவர்கள் வழக்குபதிவு செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தார்.
மேற்கண்ட நபர்கள் தொடர்ந்து சட்டவிரோத செயலில் ஈடுபடுவதை தடுப்பதற்காக குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் அடைக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன்குமார், இ.கா.ப., அவர்கள் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். மாவட்ட ஆட்சியர் திரு.பா.முருகேஷ், இ.ஆ.ப., அவர்கள், மேற்கண்ட 4 நபர்களையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து, சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து நமது நிருபர்
திரு.தாமோதரன்