திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த மாதம் லாரி மற்றும் காரில் அரசால் தடைசெய்யப்பட்ட ஆயிரம் கிலோ புகையிலைப் பொருட்களை கடத்தி வந்த திண்டுக்கல், சேலம் மற்றும் கிருஷ்ணகிரியை
சேர்ந்த கனவா சாதிக் அலி, சிக்கந்தர், ரபிக் மற்றும் சிவக்குமார் ஆகிய நான்கு நபர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தனிப்படை போலீசார் மற்றும் காவல்நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் நான்கு நபர்களையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்களின் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் திரு.விசாகன், இ.ஆ.ப.,அவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
உத்தரவைத் தொடர்ந்து வேடசந்தூர் காவல் நிலைய போலீசார் தேனி மாவட்ட சிறைச்சாலையில் இருந்து கனவா சாதிக் அலி, சிக்கந்தர், ரபிக் மற்றும் சிவக்குமார் ஆகிய நான்கு நபர்களை எடுத்து குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
