விழுப்புரம் : விழுப்புரம் மேல்மலையனூர் மேல்மலையனூர் அருகே நீலாம்பூண்டியில் வளத்தி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது செஞ்சி நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்த வேனை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 4 டன் ரேஷன் அரிசி இருந்ததை கண்டுபிடித்தனர். இதுதொடர்பாக டிரைவரை பிடித்து விசாரணை செய்தபோது அவர் திருவண்ணாமலை மாவட்டம் கீழ் ராவந்தபாடி கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் கிருஷ்ணமூர்த்தி (32) என்பதும், திருவண்ணாமலையிலிருந்து ரேஷன் அரிசியை கடத்தி செஞ்சி அருகே உள்ள கிராமத்துக்கு கொண்டு செல்ல முயன்றபோது போலீசாரிடம் சிக்கியதும் தொியவந்தது. இதையடுத்து கிருஷ்ணமூர்த்தியை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 4 டன் ரேஷன் அரிசியுடன் மினி லாரியையும் பறிமுதல் செய்தனர்.