தூத்துக்குடி : சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிப்காட் வளாகத்தில், உள்ள தனியார் பொறியியல் பட்டறையில் கடந்த மாதத்தில் அங்கு இருந்த இரும்பு பொருட்கள் காணாமல் போயுள்ளது. இதுகுறித்து மேற்படி தனியார் பட்டறையின் மேலாளர் தூத்துக்குடி இடையர்காடு பகுதியை சேர்ந்த சின்னதுரை மகன் ராஜா (34), என்பவர் அளித்த புகாரின் பேரில் சிப்காட் காவல் நிலைய காவல்துறையினர், வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், தூத்துக்குடி பிரையன்ட் நகர் பகுதியை சேர்ந்த அன்டோ மகன் ரமேஷ் (38), என்பவர் மேற்படி நிறுவனத்தில் இருந்த இரும்பு பொருட்களை திருடியது தெரியவந்தது.
இதனையடுத்து சிப்காட் காவல் நிலைய உதவியாளர் திரு. சங்கர், மேற்படி ரமேஷை கைது செய்து அவரிடமிருந்த திருடப்பட்ட ரூபாய் 2,40,000/- மதிப்புள்ள 4 டன் இரும்பு பொருட்களையும் பறிமுதல் செய்தார்.