தூத்துக்குடி: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கே. இளம்பகவத் இ.ஆ.ப அவர்கள் உத்தரவின் பேரில் தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி தாமஸ் நகர் பகுதியில் நடந்த கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளான தூத்துக்குடி மேலசண்முகபுரம் பகுதியை சேர்ந்தவர்களான பால்ராஜ் மகன் லோகேஷ் (எ) லோக ஈஸ்வரன் 22, சங்கர் மகன் விஜி (எ) விஜயகுமார் 25, முருகன் மகன் தர்மராஜ் 26. மற்றும் கலைமணி மகன் உதயா (எ) உதயகுமார் 26. ஆகியோரை இன்று (14.02.2025) தென்பாகம் காவல் நிலைய போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.