கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளியில் குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அவர் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் தனிப்படை போலீசார் வேப்பனப்பள்ளியில் உள்ள மளிகை கடைகளில் திடீரென சோதனை செய்தனர். அப்போது வேப்பனப்பள்ளியில் உள்ள மளிகை கடையில் தடை செய்யப்பட்ட குட்கா விற்றது தெரிய வந்தது. இதுதொடர்பாக சின்னபொம்மரசனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசகவுடு ஸ்ரீநாத் (28), என்பவரை போலீசார் கைது செய்தனர். 4 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.