வேலூர்: வேலூர் காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் திருமதி.உமா மகேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் திரு .அருண் ராஜ்குமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் நேற்று ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த 2 வட மாநில வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் 4 கிலோ கஞ்சாவை கடத்தி செல்வது தெரிய வந்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த அசோக் மஜிந்தார் 24. பிஸ்வஜித் மந்தர் 23. என்பது தெரிய வந்தது. அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து. 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.