சென்னை: விருகம்பாக்கம் பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை விற்பனை செய்த ஜாகீர் உசேன் என்பவர் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்களின் உத்தரவான “போதைக்கெதிரான தடுப்பு நடவடிக்கையான “DAD – DRIVE AGAINST DRUGS ” –ன் தொடர்ச்சியாக, R5 விருகம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் 11.06.2021 அன்று சாலிகிராமம், காந்திநகர், திவாகர் தெருவில் கண்காணித்த போது, அங்கு தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப்பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்த ஜாகீர் உசேன், (53) வடபழனி என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 39 கிலோ 200 கிராம் குட்கா புகையிலைப் பொருட்கள் , பணம் ரூ.6,800/- கைப்பற்றப்பட்டது.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்டு வரும் போதைக்கெதிரான தடுப்பு நடவடிக்கையான “DAD – DRIVE AGAINST DRUGS” – ன் தொடர்ச்சியாக, J-8 நீலாங்கரை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த தகவலின் பேரில், 11.06.2021 அன்று காலை கொட்டிவாக்கம், மீன் மார்கெட் அருகே கண்காணித்த போது, அங்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த சங்கர் (எ) அஜித் (21), சந்தோஷ் (25), ஜானேஷ் (21), ஆகிய 3 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1.7 கிலோ கஞ்சா மற்றும் 1 இருசக்கர வாகனம் கைப்பற்றப்பட்டு, அவர்கள்மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.