மதுரை : மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் கோவில் மலையை சுற்றியுள்ள கிரிவலப்பாதையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபடுவர். வழக்கம்போல் இன்று காலை ரோந்து மேற்கொண்ட காவல்துறையினரை பார்த்ததும் இளைஞர் ஒருவர் தப்ப முயன்றார். கையில் கட்டை பையுடன் தப்பமுயன்ற இளைஞரை மடக்கிப் பிடித்த சார்பு ஆய்வாளர் அவரிடம் விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் அந்த இளைஞர் தேனி மாவட்டம் கம்பம் வடக்குபட்டி பகுதி குரங்குமாயம் தெருவை சேர்ந்த குமார் என்பவரது மகன் சஞ்சய்குமார் (20) என்று விசாரணையில் தெரியவந்தது.
தொடர்ந்து போலீசாரின் விசாரணையில் முன்னுக்குப் பின் முரணான பதில்களை கூறியதால் சந்தேகம் அடைந்த போலீசார் இளைஞரின் உடமையை சோதனை செய்த போது அவன் கையில் வைத்திருந்த கட்டைப்பையில் 7.2 கிலோ கஞ்சாவை பண்டல் போட்டு வைத்திருந்தது தெரியவந்தது, உடனே சஞ்சய் குமாரை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார் யாருக்கு விற்பனை செய்வதற்காக இங்கு கொண்டுவரப்பட்டது என்பது என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி