அனுமதி இன்றி பேனர் வைத்தவர் மீது வழக்கு
கோவை சாரமேடு பகுதியில் உள்ள ஒரு பள்ளி அருகே அனுமதியின்றி பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டு இருந்தது. இதை அந்த பகுதியில் ரோந்து சென்ற போத்தனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கஸ்தூரி பார்த்தார். இதையடுத்து தேர்தல் விதிமுறைகளை மீறி பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டதாக முகமது சானவாஸ் என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கோவையில் 500 கிராம் தங்கம் மோசடி நகை தொழிலாளிக்கு வலைவீச்சு
கோவை கவுண்டம்பாளையம் டி வி எஸ் நகரைச் சேர்ந்தவர் சுப்ரட்டாபாரிக் ( வயது 45) நகைத் தொழில் செய்து வருகிறார் இவர் கோவை ஆர் எஸ் புரம் தியாகி குமரன் வீதியில் நகை பட்டறை வைத்துள்ள மேற்கு வங்காளத்தை சேர்ந்த டோபாஸ் சமந்தா என்பவரிடம் 500 கிராம் தங்கம் கொடுத்து கம்மல் செய்து தருமாறு கூறியுள்ளார் . 2 மாதம் ஆகியும் கம்மல் செய்து கொடுக்கவில்லை. இந்த நிலையில் டோபாஸ் சமந்தா திடீரென்று மாயமாகி விட்டார் இதுகுறித்து சுப்ரட்டா பாரிக் ஆர் எஸ் புரம் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்கு வங்காளத்தை சேர்ந்த நகை தொழிலாளி சமந்தாவை தேடிவருகிறார்கள்.
கோவையில் துப்பாக்கி காட்டி மிரட்டி பணம் பறித்த 2 கொள்ளையர் கைது
கோவை சவுரிபாளையம் தேர் வீதியைச் சேர்ந்தவர் நாகராஜன்(வயது 36). இவர் நேற்று அங்குள்ள பிருந்தாவன் நகர் எஸ் ஐ எச். எஸ் காலனி ரோட்டில் நடந்து சென்றார்.
கோவை அருகே ஜன்னலை உடைத்து வீட்டில் புகுந்து மரம் நபர் திருட்டு
கோவையை அடுத்த ஆலாந்துறை பக்கம் உள்ள பூலுவபட்டியைச் சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 63) விவசாயி. நேற்று இவரது வீட்டில் நள்ளிரவு வரை டிவி பார்த்துவிட்டு அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர்.
கோவையிலிருந்து நமது நிருபர்
A. கோகுல்