திருவொற்றியூர் காவல் நிலைய நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட தலைமறைவு குற்றவாளி ஜி (எ) ஜித்தேந்திரன் என்பவர் H-8 திருவொற்றியூர் காவல் குழுவினரால் கைது – 5 கத்திகள் மற்றும் 1 கிலோ எடையுள்ள 30 கஞ்சா பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டது
சென்னை பெருநகர காவல் நிலைய குற்ற வழக்குகளில் நீதிமன்ற பிணை பெற்று சென்ற பின்னர் நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால் நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள் உத்தரவிட்டதின்பேரில், 13.07.2011 அன்று சுப்பிரமணி, வ/26, திருவொற்றியூர் என்பவரை, கொலை செய்தது தொடர்பாக H-8 திருவொற்றியூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஜி (எ) ஜித்தேந்திரன், வ/29, தண்டையார்பேட்டை என்பவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் நீதிமன்ற பிணையில் வெளியே வந்த ஜி (எ) ஜித்தேந்திரன், 2019ம் ஆண்டு முதல் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்ததால், இவர் மீது நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
அதன்பேரில், H-8 திருவொற்றியூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் ஜி (எ) ஜித்தேந்திரனை 05.03.2021அன்று கைது செய்து அவர்மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
K-10 கோயம்பேடு காவல் நிலையம் மற்றும் உணவு பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவில் உள்ள வழக்குகளில் சம்மந்தப்பட்ட வெண்ணிலா மற்றும் பாலாஜி ஆகியோர் தொடர்ந்து குற்றசெயல்களில் ஈடுபட்டதால் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின்பேரில், தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக குற்றச் செயல்களில் ஈடுபட்ட வெண்ணிலா, பெ/வ.23, கடலூர் மாவட்டம் என்பவர் மீது K-10, கோயம்பேடு காவல் நிலையத்திலும் பாலாஜி, வ/31, பட்டாளம், சென்னை என்பவர் மீது உணவு பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது .
இவர்கள் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டதால், குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர்கள் பரிந்துரை செய்ததின்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப, அவர்கள், மேற்படி குற்றவாளிகளை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய 04.03.2021 அன்று உத்தரவிட்டதின்பேரில், மேற்படி 2 குற்றவாளிகளும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு,நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.
ஓட்டேரி பகுதியில் மதுபாட்டில்கள் விற்பனை செய்த புரசைவாக்ககம் பகுதியைச் சேர்ந்த நாகவள்ளி என்பவர், G-5 தலைமைச்செயலக காலனி காவல் குழுவினரால் கைது. 285 மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டது.
சென்னையில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து, கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப, அவர்கள் உத்தரவிட்டுள்ளதின் தொடர்ச்சியாக, G-5 தலைமைச்செயலக காலனி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் 04.03.2021 ஓட்டேரி, திடீர் நகர் பகுதியில் கண்காணித்த போது, மதுபாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்த நாகவள்ளி, வ/37, புரசைவாக்ககம் என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 285 மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டது. மேலும் அவர்மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
வண்ணாரப்பேட்டை பகுதியில் இருசக்கர வாகனத்தை திருடிய பிரேம்குமார் (எ) பிளேடு பிரேம்குமார் (புளியந்தோப்பு) என்பவர் H-1 வண்ணாரப்பேட்டை காவல் குழுவினரால் கைது. இருசக்கர வாகனம் கைப்பற்றப்பட்டது.
சென்னை, அரும்பாக்கம், பகுதியைச் சேர்ந்த தினேஷ், வ/29, என்பவர் கடந்த 01.03.2021 அன்று தனது இருசக்கர வாகனத்தை அரசு ஸ்டான்லி மருத்துவமனை அருகில் நிறுத்தியிருந்த, அவரது இருசக்கர வாகனம் திருடு போயிருந்த சம்பவம் குறித்து தினேஷ், H-1 வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
H-1 வண்ணாரப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்தில் சென்று விசாரணை செய்து, அங்கு பொருத்தியிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, இருசக்கர வாகனத்தை திருடிய குற்றவாளி பிரேம்குமார் (எ) பிளேடு பிரேம்குமார், வ/25, புளியந்தோப்பு என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து இருசக்கர வாகனம் கைப்பற்றப்பட்டு, அவர்மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கோயம்பேடு பகுதியில் கஞ்சா வைத்திருந்த ஆண்டிச்சாமி (மதுரை)என்பவர் K-11 CMBT காவல் குழுவினரால் கைது. 3கிலோ 870 கிராம் கஞ்சா, 1 செல்போன் கைப்பற்றப்பட்டது.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்களின் உத்தரவான “போதைக்கெதிரான தடுப்பு நடவடிக்கையான “DAD – DRIVE AGAINST DRUGS ”-ன் தொடர்ச்சியாக K-11 CMBT காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் 05.03.2021 அன்று காலை கோயம்பேடு பேருந்து முனையம் ஆர்ச் அருகே கண்காணிப்பு பணியிலிருந்த போது, அங்கு கைப்பையுடன் நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை செய்து, பையை சோதனை செய்த போது அதில் கஞ்சா மறைத்து வைத்திருந்த ஆண்டிச்சாமி, வ/45, மதுரை என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 3 கிலோ 870 கிராம் எடை கொண்ட கஞ்சா மற்றும் 1 செல்போன் கைப்பற்றப்பட்டு, அவர்மீது நீதிமன்ற நடவடிக் கை மேற்கொள்ளப்பட்டது.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
அப்துல் ஹாபிஸ்