திருட்டு செல்போன்களை வாங்கியவர் கைது
பூக்கடை பகுதியில் திருட்டு செல்போன்களை வாங்கிய செல்போன் கடை உரிமையாளர் பஷீர் முகமது (தண்டையார்பேட்டை ) என்பவர் C – 1 பூக்கடை காவல் குழுவினரால் கைது .2 செல்போன்கள் கைப்பற்றப்பட்டது.
C – 1 பூக்கடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் செல்போன் திருட்டு வழக்கில் சுரேஷ் , வ / 32 , சித்திக் , வ / 53 , மற்றும் நைனாமுகமது , வ / 63 ஆகிய மூவர் கடந்த 10.1.2021 அன்று கைது செய்யப்பட்டனர். C – 1 பூக்கடை காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் திருட்டு செல்போன்களை வாங்கிய செல்போன் கடை உரிமையாளர் பஷீர் முகமது , வ / 25 , , தண்டையார்பேட்டை என்பவரை 03.03.2021 அன்று கைது செய்தனர்.அவரிடமிருந்து 2 செல்போன்கள் கைப்பற்றப்பட்டு .அவர்மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
போலியான ஆவணங்களை சமர்பித்து, கடன் மோசடி, 2 கைது
போலியான ஆவணங்களை சமர்பித்து ரூ.4.63 கோடி FEDARAL வங்கியில், கடன் மோசடி செய்த ரமேஷ் மற்றும் ரவிந்திரன் ஆகியோர் மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி புலனாய்வு பிரிவு காவல் குழுவினரால் கைது (03.03.2021).
திரு , ஜோஸ்மான் P. டேவிட் , Asst . Vice President Federal Bank , மவுண்ட் ரோடு, என்பவர் காவல் ஆணையாளர் அவர்களிடம் கொடுத்த புகாரில் தங்கள் கிளையில் M/s, Swasthik Associates நிறுவனத்தை சேர்ந்த நபர்கள் Trucks and trailers ஆகியவற்றை VST Motors மற்றும் RK Trading company ல் வாங்குவதற்காக ரூ -2.60 கோடி லோன் வாங்கி கொண்டு Trucks and trailers வாங்கியதாக போலியான ஆவணங்களை சமர்பித்து ரூ .4.63 கோடி ஏமாற்றியதாக கொடுத்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி புலனாய்வு பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து M/s.Swasthik Associates என்ற பெயரில் நிறுவனம் ஆரம்பித்து Federal வங்கியில் போலியான ஆவணங்களை கொடுத்து லோன்களை பெற்று மோசடி செய்த ரமேஷ், வ/51, நங்கநல்லூர் மற்றும் ரவிந்திரன் வ/41, சேப்பாக்கம் ஆகியோரை கைது செய்து நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அம்பத்தூர் பகுதியில் காணாமல்போன சிறுமி குழந்தைகள் கடத்தல் தடுப்புப்பிரிவு மற்றும் சிறுவர் நலகாவல்பிரிவு காவல் குழுவினரால் மீட்பு
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில், சென்னை பெருநகர எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில், காணாமல் போன குழந்தைகள் சம்பந்தமாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடிப்பதற்காக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவின் (CAWC) காவல் துணை ஆணையாளர் அவர்களின் நேரடி கண்காணிப்பில் குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு(ACTU), சிறுவர் நல காவல் பிரிவு-1 மற்றும் 2 (JAPU-1 &2)ஆகியோர் இணைந்து தனிப்படை அமைக்கப்பட்டு தேடப்பட்டு வந்தது.
இந்நிலையில், T-1 அம்பத்தூர் காவல் நிலைய எல்லையில், 24.02.2021 அன்று 17 வயது சிறுமி காணாமல் போனதாக அவரது தாய் புகார் கொடுத்ததின்பேரில், குழந்தைகள் தடுப்புப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினர் விசாரணை செய்து சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி அழைத்துச் சென்ற கிரிஜா, புழல் என்பவரை கைது செய்து, 17 வயது சிறுமியை மீட்டு. அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
ஹெராயின் போதை பொருள் வைத்திருந்த 2 நபர்கள் கைது
அம்பத்துர் எஸ்டேட் பகுதியில் ஹெராயின் போதை பொருள் வைத்திருந்த மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த ஜகாங்கீர் மற்றும் மாசாதூல் ஆகிய 2 நபர்கள் T – 10 திருமுல்லைவாயில் காவல் குழுவினரால் கைது . ரூ .1 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள 50 கிராம் ஹெராயின் போதை பொருள் கைப்பற்றப்பட்டது .
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்களின் உத்தரவான “போதைக்கெதிரான தடுப்பு நடவடிக்கையான “DAD – DRIVE AGAINST DRUGS ”-ன் தொடர்ச்சியாக, அம்பத்தூர் துணை ஆணையாளர் திரு . J. மகேஷ் , இ.கா.ப அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் T – 10 திருமுல்லைவாயில் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.ராஜா , தலைமைக்காவலர்கள் திரு.பாபு பாக்யராஜ் , திரு.சரவணபெருமாள் ஆகியோர் அடங்கிய தனிப்படை காவல் குழுவினர் , 03.03.2021 அன்று காலை அயப்பாக்கம் , தண்ணீர் தொட்டி அருகில் கண்காணிப்பு பணியிலிருந்தபோது , அங்கு 2 நபர்களை பிடித்து விசாரணை செய்து அவர்களை சோதனை செய்த போது ,ஹெராயின் போதை பொருள் மறைத்து வைத்திருந்த 1.ஜகாங்கீர் , வ / 23 , மேற்கு வங்க மாநிலம் 2.மாசாதூல் , வ / 30 , மேற்கு வங்க மாநிலம் ஆகிய 2 நபர்களை கைது செய்து, T – 2 அம்பத்தூர் எஸ்டேட் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.அவர்களிடமிருந்து ரூ .1,20,000 / – மதிப்புள்ள 50 கிராம் ஹெராயின் போதை பொருள் கைப்பற்றப்பட்டு , அவர்கள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
அப்துல் ஹாபிஸ்
Related