திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியை சேர்ந்தவர் மதுபாலன் இவர் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜம்புளியம்பட்டியில் தனது உறவினரின் வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மதுபாலன் அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி 01.01.2021 அன்று கடத்திச் சென்றார். இதனையறிந்த சிறுமியின் பெற்றோர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் அடிப்படையில் நிலைய ஆய்வாளர் திரு.தெய்வம் அவர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு சிறுமியை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கடத்திச் சென்ற மதுபாலனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இதற்கு உடந்தையாக இருந்த உறவினரின் மனைவியையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா