கோவை : கோவை அருகே 13வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி போஸ்கோ சட்டத்தில் கைது செய்தனர். கோவையை அடுத்த நிலம்பூர் பக்கம் உள்ள குளத்தூரை சேர்ந்தவர் ஈஸ்வரன் இவரது மகன் சதீஷ்குமார் என்ற குஞ்சன் வயது 36 கூலித்தொழிலாளி .இன்னும் திருமணம் ஆகவில்லை இவர் கடந்த 30 ஆம் தேதி அங்குள்ள தனது பாட்டி வீட்டின் முன் நின்று கொண்டிருந்த 13 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தாராம் இதுகுறித்து அந்த ஊர் பொதுமக்கள் சைல்டு ஹெல்ப் லைன் க்கு புகார் செய்தனர் | அவர்கள் விசாரணை நடத்தியதில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யபட்டிருப்பது உண்மை என்பது தெரியவந்தது. இந்த சிறுமி 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இதையடுத்து பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பு செல்வி வழக்கு பதிவு செய்து சதீஷ்குமாரை நேற்று மாலை கைது செய்தார். இவர் மீது போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவையிலிருந்து நமது நிருபர்
A. கோகுல்