திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நரசிங்கபுரம் பகுதியில் உள்ள பொதுமக்களை காவல் நிலைய ஆய்வாளர் திரு.ரமேஷ் குமார் அவர்கள் நேரில் சென்று அவர்களிடம் குறைதீர்க்கும் முகாம் நடத்தி நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள புகார் மனுக்கள் மற்றும் தனிப்பட்ட புகார் மனுக்கள் குறித்து விசாரணை செய்து நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும் கொரோனாா வைரஸ் தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ள பொதுமக்கள் வெளியில் செல்லும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்கும் படியும் அறிவுரை கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா