திண்டுக்கல் : திண்டுக்கல் நகர் பகுதியில் கடந்த சில நாட்களாக ஓடும் பேருந்தில் பயணிகளின் பைகள் திருடப்பட்டு வந்தது. இதுசம்பந்தமாக திண்டுக்கல் நகர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.மணிமாறன் அவர்களின் தலைமையில், நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு.உலகநாதன் அவர்கள் சார்பு ஆய்வாளர் திரு.ஜான்சன் ஜெயக்குமார் அவர்கள் நகர் உட்கோட்ட குற்றதடுப்பு சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் திரு.நல்லதம்பி, திரு.வீரபாண்டியன், தலைமை காவலர்கள் திரு.ஜார்ஜ் எட்வர்ட், திரு.ராதாகிருஷ்ணன், திரு.முகமதுஅலி, முதல் நிலை காவலர் திரு.விசுவாசம் ஜெயராஜ், ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் குற்றவாளியை தேடிவந்த நிலையில், அவர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மதுரையைச் சேர்ந்த முருகேசன் (52), செல்வி (52) ஆகியோரை பிடித்து விசாரணை செய்ததில், ஓடும் பேருந்தில் பயணிகளின் பைகளை திருடியதை ஒப்புக்கொண்டனர். மேலும் அவர்களிடமிருந்து நகர் வடக்கு காவல் நிலைய குற்ற வழக்கில் 11 சவரன் தங்க நகைகளும், நகர் தெற்கு காவல் நிலைய குற்ற வழக்கில் 2 சவரன் தங்க நகைகளும் மொத்தம் 13 சவரன் தங்க நகைகள் மீட்கப்பட்டு மேற்கண்ட எதிரிகள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
திண்டுக்கலில் இருந்து நமது நிருபர்
திரு.மீரா மைதீன்