சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களது ஆணைக்கிணங்க, காவல்துறை தலைமை இயக்குநர் திரு.சைலேந்திரபாபு, இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில், தென் மண்டல காவல்துறை தலைவர் திரு.அஸ்ரா கார்க், இ.காய அவர்களின் வழிகாட்டுதலின்பேரில் இராமநாதபுரம் சரக காவல்துறை துணை தலைவர் திரு.துரை, இ.கா.ப, அவர்கள், மற்றும் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.செல்வராஜ் ஆகியோர் தலைமையில் (28.06.2023) புதன்கிழமை பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், அனைத்து உட்கோட்ட காவல் துணைக்கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர். (28.06.2023) நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் புதிதாக கொடுக்கப்பட்ட 35 மனுக்களுக்கும், மேலும் முதலமைச்சரின் தனிப்பிரிவு, முதல்வரின் முகவரி, மாவட்ட ஆட்சித்தலைவரின் குறைதீர்க்கும் நாளில் பெறப்பட்ட மனுக்கள் என நிலுவையிலிருந்த 2 மனுக்கள் என மொத்தம் 37 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி