கோவை: கோவை பக்கம் உள்ள இடிகரை சேர்ந்தவர் பால்ராஜ். விவசாயி இவர் பட்டா மாறுதல் செய்வதற்காக வெள்ளானைப்பட்டி கிராம நிர்வாக அதிகாரி குமார் 40 என்பவரை அணுகினார்.
அதற்கு விஏஓ குமார் ரூ 3500 லஞ்சம் கேட்டாராம்..இதுகுறித்து கோவை லஞ்ச ஒழிப்பு போலீசில் பால்ராஜ் புகார் செய்தார் .போலீசார் ரசாயனமை தடவிய ரூபாய் நோட்டுகளை பால்ராஜிடம் கொடுத்தனுப்பிவிட்டு மறைந்து நின்று கண்காணித்தனர்.
பால்ராஜ் கிராம நிர்வாக அதிகாரி குமாரிடம் கொடுக்கும்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்துகைது செய்தனர்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்